Enable Javscript for better performance
513 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே சூலமங்கலம் ஊராட்சியில் 513 பேருக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள்  அண்மையில் வழங்கப்பட்டது.

    விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிவ.மணிமாறன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), இரா. துரைக்கண்ணு (பாபநாசம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு  விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவைகளை வழங்கிப் பேசினர்.

    இதில், சிறப்பு திட்ட செயலாக்கம் தனி துணை ஆட்சியர்  பி. குணசேகரன், தனி துணை வட்டாட்சியர் பாலேந்திரன், பாபநாசம் வட்டாட்சியர் வி.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் கே. கோபிநாதன், துணை தலைவர் டி. ஆனந்தி, பாபநாசம் பேரூராட்சி தலைவர் எம். கருணாநிதி, அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் கே.வி. கோவிந்தராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai