Enable Javscript for better performance
அம்மாசத்திரம் காலபைரவர் கோவிலில் இன்று அஷ்டமி பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    அம்மாசத்திரம் காலபைரவர் கோவிலில் இன்று அஷ்டமி பெருவிழா

    By கும்பகோணம்,  |   Published on : 03rd April 2013 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகேயுள்ள அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கால பைரவர் அஷ்டமி பெருவிழா புதன்கிழமை (ஏப்.3) நடைபெற உள்ளது.

    இத்தலத்து அம்பாள் ஞானாம்பிகையை சப்தரிஷீஸ்வரருக்கு 7 ரிஷிகளும் சேர்ந்து திருக்கல்யாணம் செய்து வைத்ததால் இத்தலம் இந்த காரண பெயரால் அழைக்கப்படுகிறது.

    இத்தலத்தில் உள்ள பைரவர், சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தையே இயக்குவதால் இவருக்கு கால பைரவர் என்ற பெயர் ஏற்பட்டது.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபட்டால் தோஷங்கள் விலகி அனைத்து நலன்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.புதன்கிழமை அஷ்டமி பெருவிழாவையொட்டி, சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai