Enable Javscript for better performance
இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி முஸ்லிம் லீக் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி முஸ்லிம் லீக் பேரணி

    By தஞ்சாவூர்  |   Published on : 03rd April 2013 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீதமும், தமிழக அரசு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தஞ்சாவூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.

    மேலும், நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். நீண்டகாலமாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டன.ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் தொடங்கிய இந்தப் பேரணி பனகல் கட்டடம் முன்பு முடிவடைந்தது. அமைப்பின் கல்விப் பணிச் செயலர் ஏ.எம். ஷாஜகான் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.எஸ். ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai