Enable Javscript for better performance
இலவச வேட்டி,சேலை வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

     கும்பகோணம் நகரில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி திங்கள்கிழமை (ஏப். 1) தொடங்கியது.

    நகரில் மேலக்காவேரி 3-வது வார்டில் இதன் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர அதிமுக செயலருமான ராம.ராமநாதன், நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர், துணைத் தலைவர் ராஜாநடராஜன் ஆகியோர் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினர்.

    முன்னாள் நகரச் செயலர் பி.எஸ். சேகர், நகர்மன்ற உறுப்பினர்கள் ரோஜாகனி, முத்துராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, கும்பகோணம் நகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்  இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி தொடங்கியது.                                             

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai