எல்.இ.டி விளக்குகள் தயாரிக்க ஏப்ரல் 8 முதல் பயிற்சி
By தஞ்சாவூர் | Published on : 03rd April 2013 05:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் ஏப். 8-ம் தேதி முதல் எல்.இ.டி. விளக்குகள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து வளாகத்தின் தலைமைச் செயல் அலுவலர் அ.ப. அருணா தெரிவித்திருப்பது:
நடப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு புதுமையான வழிமுறைகளைக் கையாளும்போது அந்தத் தொழில்நுட்பம் பெரும் வெற்றி அடைகிறது.அதுபோன்ற தொழில்நுட்பங்களைச் சரியான நேரத்தில், சரியான வகையில் அடையாளம் கண்டு கொண்டு பயன்படுத்துவோரே வெற்றி பெற முடியும். அத்தகைய தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் மின்சார செலவை குறைக்கும் எல்.இ.டி. விளக்குகள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இந்த எல்.இ.டி. விளக்குகளை தயாரித்து பயன்படுத்துவதுடன், விருப்பப்பட்டவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும் அளித்து வருகிறது. இதுதொடர்பாக ஏப். 8-ம் தேதி முதல் 5 நாள்கள் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒரு பயிற்சிக்கு 10 பேர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர். இதற்குக் கல்வித் தகுதி தேவையில்லை. எந்த வயதினரும் கற்றுக் கொள்ளலாம். வீட்டிலிருந்தபடியே தயாரித்து விளக்குகளை விற்பனை செய்ய முடியும். மேலும், தகவல் பெற பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பக அலுவலர்களை 04362 - 264520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.