ஏப். 5-ல் சக்கரபாணி கோவிலில் திருக்கல்யாணம்
By கும்பகோணம் | Published on : 03rd April 2013 05:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோவிலில் ஏப். 5-ல் திருக்கல்யாண உத்சவம் நடைபெறவுள்ளது.
இக்கோவிலில் உள்ள விஜயவல்லி தாயார், சுதர்சனவல்லி தாயார் சமேதராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சக்கரபாணி. இவரை சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அக்னி பகவான் ஆகியோர் வந்து வழிபட்டதால், உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி மற்றும் குங்குமம் ஆகிய பொருள்களை கொண்டு இக்கோவிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.
இக்கோவிலில் வரும் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் 11 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு விஜயவல்லி தாயாருக்கும் சக்கரபாணி சுவாமிக்கும் திருக்கல்யாண உத்சவம் நடைபெறவுள்ளது. 6-ம் தேதி மாலை 4 மணியளவில் சுவாமிக்கு திருமஞ்சனமும், இரவு 7.30 மணியளவில் விஜயவல்லித் தாயாருடன் சுவாமி வீதிவுலா நடைபெறும்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் மண்டகபடிதாரர் தொழிலதிபர் சண்முகராஜா உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.