Enable Javscript for better performance
கட்டட உரிமம் பெற ஏப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    கட்டட உரிமம் பெற ஏப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 03rd April 2013 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     கட்டட உரிமம் பெறாத அல்லது புதுப்பிக்காத உரிமையாளர்கள் ஏப். 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

    மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் (உரிமங்கள்) சட்டப்படி 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் தரை பரப்பளவு கொண்ட பள்ளிகள், கல்லூரிகள், டுடோரியல் கல்லூரிகள், டுடோரியல் பள்ளிகள், விடுதி, திருமண மண்டபங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், மருத்துவ ஆலோசனை மையங்கள் ஆகிய பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டடங்களுக்கு அவற்றின் உரிமையாளர்கள் சட்டப்படி உரிமங்கள் பெற வேண்டும்.

    அவ்வாறு உரிமம் பெறாத அல்லது ஏற்கெனவே உரிமங்கள் பெற்று புதுப்பிக்கப்படாத கட்டடங்கள் அனைத்துக்கும் அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக இந்தச் சட்டத்தின் கீழ் உரிமம் கோரி சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் ஏப். 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    அவ்வாறு உரிமம் பெறாத கட்டடங்களின் பயன்பாட்டை நிறுத்தி வைக்க சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai