Enable Javscript for better performance
சித்திரக்குடி ஊராட்சியில் \\\"அம்மா\\\' திட்டம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சித்திரக்குடி ஊராட்சியில் "அம்மா' திட்டம் தொடக்கம்

    By திருக்காட்டுப்பள்ளி  |   Published on : 03rd April 2013 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தஞ்சாவூர் ஒன்றியம், சித்திரக்குடி ஊராட்சியில் "அம்மா' திட்டத்துக்கான நேர்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    சித்திரக்குடி ஊராட்சி வைரபெருமாள்பட்டியில் நடைபெற்ற முகாமுக்கு தஞ்சாவூர், சமூகநலத் துறை தனி வட்டாட்சியர் பானுகோபன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் முருகவேல், சித்திரக்குடி ஊராட்சித் தலைவர்

    அ. சேரலாதன், பூதலூர் வருவாய் ஆய்வாளர் என்.அ. மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் செல்வக்குமாரி பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், நலத் திட்டம் பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்கி தனி வட்டாட்சியர் ஆர். பானுகோபன் பேசியது:

    வருவாய்த் துறை, சமூகநலத் துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகளின் சார்பில் நாள்தோறும் ஏராளமான மனுக்கள் வருகின்றன.

    இவற்றை சீரமைக்கும் வகையிலும், கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் பயனடையும் வகையிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இத்திட்டமானது  தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

    முகாமில் மக்கள், முதியோர் ஓய்வு ஊதியம், இலவச பட்டா, வீட்டுமனை, பட்டா மாற்றம், சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகை சான்றிதழ்கள் வாங்குவதற்கான உடனடி ஆணைகள் ஆய்வு செய்து பிறப்பிக்கப்படுகின்றன. இதனை மக்கள் பயன்படுதிக் கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவில் வருவாய்த் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வக்குமாரி பாண்டியன், எஸ். தம்பித்துரை, ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai