Enable Javscript for better performance
மாரியம்மனுக்கு பால் குடம் எடுத்த பக்தர்கள்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரிலிருந்து புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

    தஞ்சாவூர் புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் பிராம்மனாள் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பால்குட விழாவில் சிவகங்கை பூங்கா அருகிலிருந்து பால் குட ஊர்வலம் தொடங்கியது.

    பிரதான சாலைகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் பிற்பகல் மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    பின்னர், மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை 6 மணியளவில் ஆபரண அலங்காரத்துடன் ஸ்ரீ அம்மன் புறப்பாடு, வாண வேடிக்கை, நாகசுரம் ஆகியவற்றுடன் ஊர்வலம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, தஞ்சை மேல வீதி சங்கர மடத்தில் மார்ச் 29-ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை காலையில் வேத பாராயணமும், மாலையில் ஸ்ரீ அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai