Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய 16 மாட்டு வண்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 16 மாட்டு வண்டிகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

    இப்பகுதியில் உள்ள காவிரி மற்றும் அரசலாற்றில் அதிகாலை நேரத்தில் மாட்டு வண்டிகளில் கொட்டையூர், வலையப்பேட்டை, மாங்குடி, சுவாமிமலை ஆகிய பகுதிகளில் மணல் அள்ளி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை, போலீஸார் அவ்வப்போது சோதனை நடத்தி மாட்டு வண்டிகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முருகவேல், உதவி ஆய்வாளர்கள் பிரேமா, வரலட்சுமி மற்றும் போலீஸார் புதன்கிழமை அதிகாலை காவிரி ஆற்றின் தென்கரையில் வலையப்பேட்டை பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது, காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 16 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, அந்த வண்டிகளை தாலுகா காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆற்றில் மணல் அள்ளியது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai