Enable Javscript for better performance
அரசப்பட்டில் மக்கள் சக்தி இயக்கக் கிளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகேயுள்ள அரசப்பட்டில் மக்கள் சக்தி இயக்கக் கிளை அண்மையில் தொடங்கப்பட்டது.இந்த இயக்கத்தின் மாநில ஆலோசகர் எல். பாஸ்கரன் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தேர்வுக் கால நேரங்களில் தமிழக அரசு முழுமையாக மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தஞ்சை மாவட்டச் செயலர் உதயகுமார், மாநில ஆலோசகர் வடிவேலு, கீழ மின்னாத்தூர் கிளைச் செயலர். ஏ. சுரேஷ், அரசப்பட்டு கிளைச் செயலர் இ. விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதேபோல, பனையக்கோட்டையில் நடைபெற்ற கிளைத் திறப்பு விழாவில் அக்கிளைச் செயலர் ஏ. ஆனந்தராஜா, துணைச் செயலர் என். சிவகுமார், பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai