Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் அரை நாள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், கும்பகோணம் காந்திபூங்கா அருகில் புதன்கிழமை நடைபெற்ற அரை நாள் தர்னா போராட்டத்தில் அரசாணை 71 குறித்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதால், அரசு பிறப்பித்துள்ள நிர்வாகத் தடையை நீக்கி மேற்கண்ட அரசாணையை அமல்படுத்திட வேண்டும். அரசாணை 371 குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த 17-1-2013 அன்று வழங்கிய தீர்ப்பை ஓய்வு பெற்ற நாளினை கணக்கில் கொள்ளாமல் ஓய்வு பெற்ற அனைவருக்கும் பொருந்தும் வகையில், பொதுவான அரசாணை வெளியிட வேண்டும். மருத்துவச் செலவை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ. 1 லட்சத்தை ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்டத் தலைவர் நீ. ருத்ராபதி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் வி. அய்யப்பன் வரவேற்றார். மாவட்டச் செயலர் கே.வி. நடராஜன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநிலப் பொருளாளர் எஸ். துரைக்கண்ணு சிறப்புரையாற்றினார். குடந்தை வட்டக் கிளை தலைவர் எம்.ஆர். அழகப்பன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai