Enable Javscript for better performance
\\\"காப்பீட்டுத் திட்டத்தில் 518 பேருக்குச் சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இதுவரை 518 பேருக்கு பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன்.

    புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயன்பாடுகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்து அவர் பேசியது:

    மருத்துவக் காப்பீடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டணமில்லாத மருத்துவச் சிகிச்சை, அறுவைச் சிகிச்சைகளை அரசு மற்றும் தகுதி வாய்ந்த தனியார் மருத்துவமனைகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    இதுவரை நமது மாவட்டத்தில் நடத்தப்பட்ட 71 மருத்துவ முகாம்கள் மூலம் 518 நபர்களுக்கு பல வகை அறுவைச் சிகிச்சைகளும், 56 பேருக்குத் தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டம் குறித்த பயிற்சி முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மையங்களிலும் நடத்தப்பட உள்ளது. காப்பீட்டுத் திட்ட அலுவலர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகள், கிராமச் சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வட்டாரச் சுகாதார செவிலியர்கள், பகுதி நேர சுகாதார செவிலியர்கள் சமுதாயச் சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் பயிற்சி பெறவதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன் பெற முடியும் என்றார்.

    இதில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர். சக்திவேல், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியர் பா. பாக்கியம் தேவகிருபை, ஒன்றியக் குழுத் தலைவர் துரை. தனசேகரன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் த. பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எ. செல்வராஜ், எம். ராஜா ஆகியோர் பேசினர்.

    யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன மேலாளர் அசோகன் வரவேற்றார். மாவட்டத் திட்ட அலுவலர் கோ. சாமிநாதன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai