Enable Javscript for better performance
தஞ்சை மாவட்ட வருவாய் கிராமங்களில் ஏப். 14-ல் உழவர் பெருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை மாவட்ட வருவாய் கிராமங்களில் ஏப். 14-ல் உழவர் பெருவிழா தொடக்கம்

    By dn  |   Published on : 04th April 2013 12:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் ஏப். 14-ம் தேதி உழவர் பெருவிழா ஏப். 14-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் கா. பாஸ்கரன் பேசியது:

    தமிழக முதல்வரின் ஆணைப்படி நிகழ் நிதியாண்டில் தமிழகத்தில் 16,995 வருவாய் கிராமங்களில் தமிழ் புத்தாண்டான ஏப். 14-ம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மே 10-ம் தேதி வரை உழவர் பெருவிழா நடத்தப்படவுள்ளது.

    இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பெருவிழா நடத்தப்படுவதன் மூலம் இரண்டாம் பசுமை புரட்சியின் கோட்பாடுகளை ஒவ்வொரு விவசாயிகளும் அறிந்திடும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும்.

    மேலும், வேளாண்மை தொடர்பான செய்திகளை விவசாயிகளுக்கு விளக்கிடவும், மாதிரி ஊர்திகள் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தொழில்நுட்பக் கருத்துரை, செயல் விளக்கங்கள், துண்டு பிரசுரங்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட விளம்பரங்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உழவர் பெருவிழாக்களில் விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளை அதிக அளவில் பங்கேற்கச் செய்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் பாஸ்கரன்.

    வேளாண் துறை இணை இயக்குநர் எம்.இசட். முகமது யாஹியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai