Enable Javscript for better performance
\\\"தனித்திறமையை வளர்த்துக்கொண்டால் வேலைவாய்ப்பை பெறலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "தனித்திறமையை வளர்த்துக்கொண்டால் வேலைவாய்ப்பை பெறலாம்'

    By dn  |   Published on : 04th April 2013 12:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொண்டால் வேலைவாய்ப்பை பெறலாம் என்றார் கடற்கரை பாதுகாப்பு காவல் துறை கண்காணிப்பாளர் வி.எச். முகமதுஹனீபா.

    கும்பகோணம் அருகே அஸ்ஸலாம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் 4-ம் ஆண்டு விளையாட்டு விழா, ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.ஜே.ஏ. ஜமால் முகமது இப்ராகிம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஓ. முகமது உசேன், இணைச் செயலர்கள் ஏ.சிராஜூதின், ஒய். சாதிக் மைதீன், பொருளாளர் ஏ. அன்வர்பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பி. ராமசுப்பிரமணியன் வரவேற்றார். செயலர் ஏ.எம். ஷாஜகான் கருத்துரை வழங்கினார்.

    இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் பி. தர்மராஜ், முதன்மை மேலாளர் குமரன், ஐ.ஏ.எஸ். அகாதெமி இயக்குநர் ரஹ்மத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கடற்கரை பாதுகாப்பு காவல் துறை கண்காணிப்பாளர் வி.எச். முகமது ஹனீபா பேசியது:

    தமிழகம் கல்வி, அறிவியலில் 98 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது. சாலை விபத்தின் காரணமாக உயரிழப்பு அதிகமாகி வருகிறது. எனவே, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் விழிப்புணர்வுடன் பயணம் செய்யவும். மாணவர்களின் உயிர் மதிப்பிட முடியாதவை. பொறியியல் படிப்போடு உயர் கல்வியை கற்க வேண்டும். அப்போதுதான் பொது அறிவு, அன்றாட வளர்ச்சி தொடர்பான செய்திகள் சமூக மாற்றத்தை மாணவர்களுக்கு உருவாக்கி தரும். மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டால்தான் வேலைவாய்ப்பு பெறுவது நிச்சயம் என்றார்.

    முன்னதாக, விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி இயக்குநர் காரல்மார்க்ஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai