Enable Javscript for better performance
தூய செபஸ்தியார் திருத்தல ஆண்டு பெருவிழா தேர்பவனி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தூய செபஸ்தியார் திருத்தல ஆண்டு பெருவிழா தேர்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கடந்த மார்ச் 24 -ம் தேதி தஞ்சாவூர் தூய அருளானந்தர் கல்வியியல் கல்லூரி இயக்குநர் ஜான் கென்னடி கொடியேற்றி விழாவைத் தொடக்கிவைத்தார். தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

    ஏப். 1 -ம் தேதி கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா திருப்பலியும், ஏப். 2 -ம் தேதி கும்பகோணம் ஆயர் எப். அந்தோனிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. இரவு விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட தேர்களில் காவல் சம்மனசு, தூய செபஸ்தியார், குழந்தை ஏசு, அந்தோனியார், தேவமாதா உள்ளிட்ட சொரூபங்களின் தேர்பவனி நடைபெற்றது.

    பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே சொரூபங்களுக்கு பொம்மை பூப்போடும் நிகழச்சி நடைபெற்று, தேர்கள் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தேவாலயத்தை அடைந்தது.

    ஏப். 3 -ம் தேதி திண்டுக்கல் ஆயர் அந்தோனி பாப்புசாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, நற்கருணை ஆசீர்வாதம் செய்து அன்று மாலை கொடியிறக்கம் நடைபெற்று விழா நிறைவுற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பாபநாசம் தூய செபஸ்தியார் தேவாலய அருட் தந்தைகள் பீட்டர் ஆரோக்கியதாஸ், அ. குழந்தைநாதன் மற்றும் அருட்கன்னியர்கள், பங்கு பேரவையினர், இறைமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai