Enable Javscript for better performance
பெண்கள் விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பசுபதிகோவில் மெர்லின் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இயங்கும் மகளிர் கூட்டமைப்பு சார்பில், பெண்கள் விழிப்புணர்வு பேரணி பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

    பேரணியை பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. துரைக்கண்ணு தலைமை வகித்து, கொடியசைத்து தொடக்கிவைத்தார். பேரணி பாபநாசம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாபநாசம் தளபதி மக்கள் மன்றத்தை அடைந்தது.

    அங்கு மகளிர் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் பெண் கல்வி, பெண் சிசுக் கொலை, பெண் சுதந்திரம், பொது சுகாதாரம் உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பாபநாசம் ஒன்றியக்குழுத் தலைவர் கே. கோபிநாதன், பாபநாசம் பேரூராட்சித் தலைவர் எம். கருணாநிதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ். மோகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலர் அடைக்கலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டமைப்புத் தலைவர் கலையரசி வரவேற்றார். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புவனா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மெர்லின் தொண்டு நிறுவனச் செயலர் டி. வின்சென்ட் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai