Enable Javscript for better performance
மண்ணெண்ணெய் வழங்கக் கோரி சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் மண்ணெண்ணெய் வழங்கக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.

    தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் மணிமண்டபம் அருகேயுள்ள அருளானந்தம்மாள் நகரில் காவேரி கூட்டுறவு சிறப்பு அங்காடி பொது விநியோக மண்ணெண்ணெய் வழங்கும் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் பூக்காரத் தெரு, அண்ணா நகர் உள்பட 10 பகுதிகளைச் சார்ந்த 10,307 குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

    இந்த மையத்துக்கு மாதம் 21,590 லிட்டர் தேவைப்படுகிறது. ஆனால், மார்ச் மாதம் 15,590 லிட்டர் மட்டுமே வந்தது. எனவே, 15,590 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மீதம் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு புதன்கிழமை (ஏப். 3) வழங்குவதாக் கூறி ஏராளமானோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதன்படி, இந்த மையத்துக்கு புதன்கிழமை காலை 150-க்கும் அதிகமானோர் குவிந்தனர்.

    ஆனால், மண்ணெண்ணெய் இருப்பு இல்லை என அலுலர்கள் கூறியதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 10 நிமிஷங்கள் தொடர்ந்த இந்தச் சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, தகவலறிந்த தஞ்சை வட்டாட்சியர் முருகதாஸ், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அர்ஜுணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்துக்குள் மண்ணெண்ணெய் வழங்குவதாக அலுவலர்கள் தெரிவித்ததையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai