Enable Javscript for better performance
விளையாட்டு விடுதியில் சேர ஏப். 25-க்குள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    விளையாட்டு விடுதியில் சேர ஏப். 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

    By dn  |   Published on : 04th April 2013 12:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூரில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் பள்ளி, விடுதியில் சேர விரும்புவோர் ஏப். 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்திருப்பது:

    மாவட்ட விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுப் பள்ளி, விடுதிக்கான தேர்வுகள் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

    மாணவர்கள் தடகளம், சிறகுப் பந்து, கூடைப்பந்து, குச்துச் சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய போட்டிகளிலும், மாணவிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாள் சண்டை, கைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ், கையுந்துபந்து, பளுத்தூக்குதல் ஆகிய போட்டிகளிலும் சேர்க்கப்படுவர்.

    விளையாட்டு விடுதி, பள்ளிகளில் சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தை அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் ரூ. 10 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தில் ஏப். 25-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai