Enable Javscript for better performance
அஞ்சல் துறை அலுவலர்களுக்கான ஊரகத் தொழில்முனைவு பயிற்ச- Dinamani

சுடச்சுட

    

     தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் துறை அலுவலர்களுக்கான ஊரகத் தொழில்முனைவு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

    இதில், அஞ்சல் துறை அலுவலர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது, எழுதுவது, புரிந்து கொள்வது ஆகிய மொழித்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    இந்தப் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு ஆங்கிலத் துறைத் தலைவர் பழனி. அரங்கசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அஞ்சலக ஆய்வாளர் பி. நிர்மலா பேசியது:

    அஞ்சல் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஆங்கில மொழி அறிவு அவசியம் என்பதை உணர்ந்து இப்பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்றுள்ள அனைவரும் சிறந்த முறையில் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில், அஞ்சல் துறை முதுநிலை கோட்ட மேலாளர் ஏ.கே. பெரோஸ் முகைதின், அஞ்சலக உதவிக் கண்காணிப்பாளர் எஸ். மனோகரன், பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் தலைமைச் செயல் அலுவலர் அ.ப. அருணா, ஆங்கிலத் துறைப் பேராசிரியர் கு. ராஜமாணிக்கம், கல்வியியல் துறைத் தலைவர் வனிதா ஆகியோர் பேசினர்.

    முன்னதாக, பெரியார் சிந்தனை உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் ச. அருணாசலம் வரவேற்றார். ஆங்கிலத் துறைப் பேராசிரியை விஜி நன்றி கூறினார்.

    தொடர்ந்து, 4 நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் 150 அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai