Enable Javscript for better performance
அம்மா\\\' திட்ட முகாம்: 37 பேருக்கு பட்டா மாறுதல்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற அம்மா  திட்ட சிறப்பு முகாமில், 37 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. 

    முகாமுக்கு வட்டாட்சியர் செ. சிதம்பரம் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத்  தலைவர் சாந்தி அசோக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் முதியோர் ஓய்வூதியம், இலவச பட்டா, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 170 மனுக்கள் பெறப்பட்டு 102 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 37 மனுக்களுக்கு பட்டா மாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டது. நிகழ்ச்சியில் அம்மா சிறப்பு திட்ட தனி துணை ஆட்சியர் குணசேகரன், சொர்ணக்காடு ஊராட்சித் தலைவர் சண்முகநாதன், பைங்கால் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னவாசல் ஊராட்சித் தலைவர் ஆர். சுந்தர் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் கோ. ஜெயவீரன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai