Enable Javscript for better performance
இலங்கை அரசைக் கண்டித்து கபிஸ்தலத்தில் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை அரசைக் கண்டித்து கபிஸ்தலத்தில் உண்ணாவிரதம்

    By பாபநாசம்,  |   Published on : 05th April 2013 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : இலங்கை அரசைக் கண்டித்து, பாபநாசம் அருகேயுள்ள கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் தமிழ்ச் சங்க அமைப்பின் சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

    இலங்கை இனப்படுகொலைக்கு காரணமான அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. கபிஸ்தலம் தமிழ்ச் சங்க அமைப்பின் செயலர் கருப்பையன் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai