Enable Javscript for better performance
கும்பகோணம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது - Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது புதன்கிழமை செய்யப்பட்டனர்.

    கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் கடைவீதியில் திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீஸார் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி  விசாரணை செய்தனர். அவர்கள் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததையடுத்து அவர்களையும், வாகனத்தையும் சோதனையிட்டனர். அவர்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய  விசாரணையில் தஞ்சை பூக்காரதெரு கிழக்கு லாயத்தை சேர்ந்த செங்கமலம் மகன்  பிரபாகரன்(23), திருவிடைமருதூர் மகாதானவீதி குமார் மகன் வினோத்(21), ரயில்வேதெரு கேசவன் மகன் சரவணன் (27) என்பது தெரிய வந்தது.  3 பேரையும்  கைதுசெய்து அவர்கள் கடத்திவந்த 1 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai