Enable Javscript for better performance
கூட்டுறவு தேர்தல்: மருத்துவத் துறை ஊழியர் சங்கத்தில் மனுக்கள் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு தேர்தல்: மருத்துவத் துறை ஊழியர் சங்கத்தில் மனுக்கள் பறிப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 05th April 2013 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூரில் உள்ள மருத்துவத் துறை ஊழியர் சங்கத்தில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களிடம் ஒரு தரப்பினர் மனுக்களை பறித்துச் சென்றனர்.

    இரண்டாம் கட்டக் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்படி, தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட மருத்துவத் துறை ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய 20 பேர் வந்தனர்.

    ஆனால், வேட்பு மனுக்கள் பெற சங்க அலுவலகத்தில் காலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் இல்லையாம். சங்க உறுப்பினர்கள் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் அலுவலகத்துக்குப் புகார் தெரிவித்ததையடுத்து, பிற்பகலில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

    அப்போது, அங்கு வந்த ஒரு கோஷ்டி ஏற்கெனவே உறுப்பினர்கள் நியமனம் குறித்து முடிவு செய்யப்பட்டதாகக் கூறி இந்த மனுக்களைப் பறித்துக் கொண்டது. இதுதொடர்பாக, மனுக்களை பறித்த கோஷ்டிக்கும், மனுக்கள் அளித்த உறுப்பினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் சங்க அலுவலகம் முன் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai