Enable Javscript for better performance
பசுந்தீவன புல் சாகுபடி செய்ய மானியம்- Dinamani

சுடச்சுட

    

    பசுந்தீவனப் புல் சாகுபடி செய்வதற்காக அரசு மானியம் வழங்குகிறது என்றார் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் சீ. சுரேஷ்குமார்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பசுந்தீவன விதைகள் வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:

    வறட்சி காலங்களில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் மானிய விலையில் தீவனங்களை வழங்குகிறார். மேலும், தீவனப் புல் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு, 50 சதம் மானியம் வழங்கப்படுகிறது.

    இதனால், வறட்சி காலங்களில் தேவைப்படும் தீவனத்தை உற்பத்தி செய்து பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அன்றைய சந்தை விலைக்கே விற்பனை செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஏக்கருக்கு 16 கிலோ விதை தேவைப்படும். அதற்கான விதை செலவு ரூ. 860 ஏற்படும்.

    அதில், 50 சதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் 700 ஏக்கருக்கு மானியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் சுரேஷ்குமார்.

    கால்நடைத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) முகமது கனி, துணை இயக்குநர் (பொறுப்பு) நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai