Enable Javscript for better performance
பழமையான கோவில்கள் காக்கப்பட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

      தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் சார்பில் நாச்சியார்கோயில் ஆகாசமாரியம்மன் கோவிலில் கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு திருக்கூட்டத்தின் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை வகித்தார்.

    திருக்கோவில்கள் நமது பண்பாடு, கலாசாரம், கலை மற்றும் தெய்வீகத்தின் பிறப்பிடமாக திகழ்கிறது. இது போல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் எண்ணற்ற கோவில்கள் உள்ளன. எனவே பழமைமிக்க கோவில்கள் போற்றி பாதுகாக்க வேண்டும்.

    தமிழக அரசு கோவில்களில் தன்னிறைவு பெற்றுள்ள கோவில்களிலிருந்தும், உபரிவருமானம் வரும் கோவில்களிலிருந்தும் நிதி திரட்டி சிதிலமடைந்துள்ள பழமைமிக்க கோவில்களை திருப்பணி செய்ய வேண்டும்.

    63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனாரின் குருபூஜை தினத்தை பழந்திருக்கோவில்களின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai