Enable Javscript for better performance
பேராவூரணியில் அரசு கல்லூரி:இளைஞர் காங். கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணியில் அரசு கல்லூரி:இளைஞர் காங். கோரிக்கை

    By பேராவூரணி,  |   Published on : 05th April 2013 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பேராவூரணியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து பேராவூரணி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. தட்சிணாமூர்த்தி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்:

    தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள பேராவூரணி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்காக சுமார் 80 கி.மீ.  தொலைவிலுள்ள தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. பேராவூரணியில் தனியார் மகளிர் கல்லூரி மட்டுமே உள்ளது. சாதாரண ஏழை எளிய மக்கள் உயர்கல்வி பெற ஆர்வமிருந்தும் வசதி வாய்ப்பு இல்லாததால் அதனைப் பெறமுடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் பேராவூரணி தொகுதியில் உயர்கல்வி வளர்ச்சி குறைவாக உள்ளது. எனவே பேராவூரணி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai