Enable Javscript for better performance
மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் பன்முக நோக்கில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை  நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். கருத்தரங்கில் 75-க்கும் மேற்பட்ட பேராளர்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ஆய்வுக் கோவை வெளியிடப்பட்டது.

    இதனை முதல்வர் வெளியிட புதுச்சேரி சுப்ரமணிய பாரதியார் மைய பல்கலைக் கழக பேராசிரியர் அறிவுநம்பி பெற்றுக் கொண்டு "காலந்தோறும் தமிழ்' என்ற தலைப்பில் பேசினார்.

    இதையடுத்து நடந்த 2 வது அமர்விற்கு இணை பேராசிரியர் சண்முகசுந்தரி தலைமை வகித்தார். துறை தலைவர் அகிலா வரவேற்றார். குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரி இணை பேராசிரியர் திராவிடமணி "அற இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்' என்ற தலைப்பில் பேசினார்.

    ஆந்திர மாநிலம் குப்பம், திராவிடன் பல்கலைக் கழக மொழி பெயர்ப்பியல் துறை தலைவர் விவேகானந்த கோபால் "அற இலக்கியங்களின் காலம்' என்ற தலைப்பில் பேசினார். பின்னர் பேராளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.  உதவி பேராசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai