Enable Javscript for better performance
வளர்இளம் பெண்களுக்கான தொழில் பயிற்சி தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    வளர்இளம் பெண்களுக்கான தொழில் பயிற்சி தொடக்க விழா

    By தஞ்சாவூர்  |   Published on : 05th April 2013 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ஈஸ்வரி நகரில் வளர் இளம் பெண்களுக்கான தொழிற் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

    தேசியக் கல்வி சமூக நல மையம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவை தஞ்சாவூர் நகர்மன்றத் தலைவர் சாவித்திரிகோபால் தொடக்கி வைத்தார்.

    மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கீதா கிருஷ்ணவேணி பேசியது: இந்தத் தொழில் பயிற்சி தஞ்சாவூர், பூதலூர், பட்டுக்கோட்டை, அம்மாபேட்டை, திருவையாறு, மதுக்கூர் உள்பட 16 வட்டாரங்களில் நடத்தப்படுகிறது. இதில், நகை தயாரிப்பு, அழகுக் கலை, கணினி, தையல் கலை, கேட்டரிங், செல்போன் சர்வீஸ், சாரி டிசைன், போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அரசு நிதியுதவியுடன் வழங்கப்படும் இந்தப் பயிற்சியின் முடிவில் ஊக்கத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் என்றார் அவர்.தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மைய இயக்குனர் பூஜாஸ்ரீ வரவேற்றார். உறுப்பினர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai