Enable Javscript for better performance
அனுமதியின்றி ஊர்வலம்: 19 விவசாயிகள் கைது- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

    தஞ்சை மாவட்டத்துக்கு ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மீண்டும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    நாள்தோறும் 5 மணிநேரத்துக்கு மேல் மின்சாரம் கிடைக்காமல் கோடை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் எவ்வளவு மின்சாரம் வழங்க முடியும் என்பதை அரசு

    அறிவிக்க வேண்டும் என்பன

    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர். சுகுமாரன் தலைமையில் நீதிமன்ற சாலையிலிருந்து மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெள்ளிக்

    கிழமை காலை ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அனுமதி பெறாமல் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சுகுமாரன் உள்பட 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai