Enable Javscript for better performance
அல்-அமீன் பள்ளி சாதனை- Dinamani

சுடச்சுட

    

     மாநில அளவில் நடைபெற்ற உறைவாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் கும்பகோணம் அல்-அமீன் பள்ளி சாதனை படைத்துள்ளது.

     இந்திய பள்ளிகள் விளையாட்டுக் கழகம் மற்றும் தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாநில அளவிலான 2-வது உறைவாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி திருப்பனந்தாள் குமரகுருபரர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

    200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் கும்பகோணம் அல்-அமீன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எஸ். ஐஸ்வர்யா, டி. சங்கவி, எஸ். ஜெயஸ்ரீ மற்றும் ஆர். மகிஷா ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும், ஆர். சதீஷ்குமார் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் டி. முகமதுஇக்பால், தாளாளர் எம். கமாலுதீன், முதல்வர் எஸ். சையது அப்துல்சுபஹான், ஆலோசகர் பி. செüந்தர்ராஜன், ஒருங்கிணைப்பாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai