Enable Javscript for better performance
உழைப்பவர் விருது அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலர் வி. சத்யநாராயணனுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மற்றவர்களுக்காவும் மாற்றங்களுக்காகவும் உழைப்பவர் என்ற விருது அண்மையில் வழங்கப்பட்டது.

    கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எல். சந்திரபிரபு தலைமை வகித்தார். செயலர் மணிக்கண்ணன், உதவி ஆளுநர் பாலாஜி, பொருளர் டி. மாணிக்கவாசகம், தொழிலதிபர் ராயா கோவிந்தராஜன், சோழா சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர்மன்ற தலைவர் ரத்னா சேகர் பங்கேற்று சத்யநாராயணனுக்கு விருதை வழங்கிப் பாராட்டினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai