Enable Javscript for better performance
ஏரி, குளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஏரி, குளங்களை முறையாகப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் சாலைகளின் இரு புறமும் மரக் கன்றுகளை நட்டு வளர்க்க தமிழக அரசு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கந்த. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏ.ஆர். வீராச்சாமி, ஏ. ராமலிங்கம், ஈகா வைத்தியநாதன், எம்.எம். சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai