Enable Javscript for better performance
ஒப்பிலியப்பன்கோவில் பங்குனி உத்திரத் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஒப்பிலியப்பன்கோவில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

    By கும்பகோணம்,  |   Published on : 06th April 2013 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோவில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    ஒப்பிலியப்பன் கோவில் பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்றது. தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி கடந்த 28-ம் தேதி தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றமும், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. புஷ்பயாகம் மற்றும் விடையாற்றியுடன் திருவிழா திங்கள்கிழமை நிறைவுபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai