Enable Javscript for better performance
கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்'

    By கும்பகோணம்  |   Published on : 06th April 2013 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, கட்சியின் மாவட்டச் செயலர் ம.க. ஸ்டாலின் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி மற்றும் கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலைப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்ட கரும்பு வெட்டப்பட்டு இந்த ஆலைகளுக்கு அனுப்படுகிறது.

    கரும்பு வெட்டி ஆலைக்கு அனுப்பிய 15 நாட்களில் விவசாயிகளுக்கு பணம் தரப்படும் என ஆலை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், 3 மாதங்களாகியும் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

    இதனால் கடனை அடைக்க முடியாமலும், குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமலும், அடுத்ததாக கரும்பு விவசாயத்தை மேற்கொள்ள பணம் இல்லாமலும் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர்.

    எனவே, விவசாயிகளுக்கு உடனே நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai