Enable Javscript for better performance
காவல் ஆய்வாளருக்கு ரூ.67 லட்சம் இழப்பீடு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் காயமடைந்து சுய நினைவை இழந்த காவல் ஆய்வாளருக்கு ரூ.67 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமா நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் திருவண்ணாமலை மாவட்டம், தென்னூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார்.

    2008, ஜன.1 அன்று வந்தவாசியில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, டேங்கர் லாரி மோதி அருள்ராஜ் சுய நினைவை இழந்தார்.

    இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முகமது அலி, அருள்ராஜூக்கு ரூ.67,68,840 இழப்பீடு வழங்க புதுச்சேரி ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai