Enable Javscript for better performance
தஞ்சை ரயில் நிலையத்தில் முழு வீச்சில் மேம்பாட்டுப் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை ரயில் நிலையத்தில் முழு வீச்சில் மேம்பாட்டுப் பணிகள்

    By தஞ்சாவூர்  |   Published on : 06th April 2013 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     : தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் நடைமேடைகளில் ரயில் போக்குவரத்துக்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மஞ்சுளா ரங்கராஜன் தெரிவித்திருப்பது:

    இந்த நிலையத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் நடைமேடைகளில் முன்பு இருந்த மீட்டர் கேஜ் பாதைகள் அகலப் பாதையாக மாற்றப்பட்டு, 24 பெட்டிகள் நிற்கும் வகையில் நடைமேடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

    முதல் மூன்று நடைமேடைகளை இணைக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நடை மேம்பாலத்தை அகலப் பாதைக்கேற்ப மாற்றியமைத்து முதல் நடை மேடையோடு இணைக்கும் பணிகள் ரூ.7 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.

    முதல் மற்றும் இரண்டாம் நடைமேடைகளில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் மின்சார கேபிள்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டன. பழைய அமைப்புகளும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. 

    கடந்த நிதியாண்டின் பிற்பகுதியில் இந்தப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளன. பணிகள் முடிவடைந்தவுடன் இரண்டாம் நடைமேடையில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படும்.

    முதல் நடைமேடை பணிகள் ஜூன் 30-க்குள் முடிவடையும். நடை மேம்பாலம் தற்போது பயணிகள் உபயோகத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதையும் விரைவில் திறக்கப்படும் என்றார் மஞ்சுளா. 

    இதையொட்டி, ஏப். 7, 8, 9-ம் தேதிகளில் தஞ்சாவூர் வழித்தடத்தில் இயங்கும் ரயில்களின் சேவையில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், முன்பதிவு செய்த பயணிகள் வசதிக்காக மாற்று ஏற்பாடுகளையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai