Enable Javscript for better performance
191 சங்கங்களுக்குத் தேர்தல்:ஒருவர் மட்டும் வாக்குப் பதிவு!- Dinamani

சுடச்சுட

    

    191 சங்கங்களுக்குத் தேர்தல்:ஒருவர் மட்டும் வாக்குப் பதிவு!

    By தஞ்சாவூர்,  |   Published on : 06th April 2013 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 191 கூட்டுறவு சங்கங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் ஒரே ஒரு சங்கத்தில் ஒருவர் மட்டுமே வாக்குப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 191 கூட்டுறவு சங்கங்களில் மார்ச் 29-ம் தேதி நடைபெற்றது. இந்தச் சங்கங்களில் 2,061 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில், பட்டுக்கோட்டை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் அரசு ஆசிரியர் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 109 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தில் ஒருவர் மட்டும்தான் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.  தவிர, திருவோணம் அருகே உள்ள பாதரங்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

     ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டு, ஏப். 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மற்ற சங்கங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

    தவிர, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 188 சங்கங்களில் ஒரு சங்கத்தில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது என்றும், மற்ற சங்கங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai