Enable Javscript for better performance
உறுப்பினர்கள் பெயர் பட்டியலை வெளிப்படையாக ஒட்டக் கோரி தர்னா- Dinamani

சுடச்சுட

    

    உறுப்பினர்கள் பெயர் பட்டியலை வெளிப்படையாக ஒட்டக் கோரி தர்னா

    By கும்பகோணம்  |   Published on : 07th April 2013 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணத்தில் கூட்டுறவு சங்கத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளிப்படையாக ஒட்ட வலியுறுத்தி,  உறுப்பினர்கள் சங்க அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக கும்பகோணத்தில் கூட்டுறவு ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

    இச்சங்கத்தில் 1098 உறுப்பினர்களும், 498 இணை உறுப்பினர்களும் உள்ளனர். இச் சங்கத்துக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக, சனிக்கிழமை (ஏப். 6) உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவது எனவும், 9-ம் தேதியிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால், சனிக்கிழமை பிற்பகல் வரை சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, சிஐடியுவைச் சேர்ந்த  உறுப்பினர்கள் சிலர் சனிக்கிழமை சங்கத்தில் உள்ளவர்களிடம், உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுமாறு கோரினர். அதற்கு ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த உறுப்பினர்கள் பெயர் பட்டியலை வாயிலில் ஒட்ட வேண்டும் என வலியுறுத்தி, சங்கத்தின் வாயில் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த வட்டாட்சியர் (பொ) கலியபெருமாள், போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சங்கத்தின் கணக்கர் சொக்கலிங்கம் உறுப்பினர்களை ஒருமையில் திட்டியதாகக் கூறப்பட்டது. பின்னர், வட்டாட்சியர் அவர்களிடம் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளிப்படையாக ஒட்டப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai