Enable Javscript for better performance
ஏப். 9-ல் 4 ஊராட்சிகளில் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் வட்டத்தில் ஏப். 9 -ம் தேதி 4 ஊராட்சிகளில் "அம்மா' திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அடிதட்டு மக்களுக்கு  அதிக சேவையை வழங்குவதற்காக கிராமங்களுக்கு மக்களைத் தேடிச் சென்று அதிகாரிகள் தீர்வு வழங்குவதற்காக அம்மா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, கும்பகோணம் வட்டத்தில் ஏப். 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அம்மாச்சத்திரம், சன்னாபுரம், சோழபுரம், ஏனநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கும்பகோணம் வட்டாட்சியர் ஸ்ரீமாதவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    மது பாட்டில்கள்

    விற்றவர் கைதுகும்பகோணம், ஏப். 6: கும்பகோணம் மொட்டை கோபுரம் அருகே பெட்டிக் கடையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மேற்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது, ஆரியப்படையூர் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மதன் (30) மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவரிடமிருந்து ரூ. 610 ரொக்கமும், 5 மது பாட்டில்களையும் போலீஸார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai