Enable Javscript for better performance
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து ஏலம்

    By தஞ்சாவூர்,  |   Published on : 07th April 2013 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளக்கிழமை உளுந்து ஏலம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் விற்பனைக் குழுக் கட்டுப்பாட்டில் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தஞ்சாவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உளுந்து ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 60 மூட்டைகள் உளுந்து வரப்பெற்றன.

    இதில், அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 4,002-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 3,860-க்கும் விற்பனையானது.

    இதேபோல, வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் உளுந்து ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் வ. தங்கராசு தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai