Enable Javscript for better performance
கணவன் மனைவியை தாக்கி தங்க சங்கலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

     அருகே சனிக்கிழமை அதிகாலை கணவன் - மனைவியை தாக்கி 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் அருகேயுள்ள மருங்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா (29). இவரும், இவரது மனைவி அருள்செல்வியும் சனிக்கிழமை அதிகாலை வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தனராம்.

    அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் ராஜாவையும், அருள்செல்வியையும் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அருள்செல்வி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.

    இதில் பலத்த காயமடைந்த ராஜா, அருள்செல்வி ஆகிய இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து வல்லம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai