Enable Javscript for better performance
தமிழ்ப் பல்கலை.க்கு ரூ.1 கோடி நிதியுதவி- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் நில அறிவியல் துறைக்குப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யு.ஜி.சி.) ரூ.1 கோடி  நிதியுதவி அளித்துள்ளது.

    இதுகுறித்து துணைவேந்தர் ம. திருமலை தெரிவித்தது:

    புதுதில்லியில் உள்ள பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொழில் மற்றும் நில அறிவியல் துறையில் புவிசார் தகவல் மற்றும் கடற்கரை சுற்றுச்சூழலியல் என்ற முதுநிலைப் பட்டய படிப்பைத் தொடங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

    இந்தப் பட்டயப் படிப்பின் மூலம் இந்திய கடற்கரையோர நில அமைப்பு, வளங்கள் மற்றும் அவற்றைக் கண்டறிதலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன் குறித்த கல்வி மாணவர்களுக்கு அளிக்கப்படவுள்ளது.

    இந்தப் படிப்புக்கு நிலத்தியல், புவியியல், உயிரியல், சுற்றுச்சூழலியல், புவி தகவலியல், தொலை உணர்வு ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தொழில் மற்றும் நில அறிவியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai