Enable Javscript for better performance
பட்டுக்கோட்டையில் கண்டன ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டையில் மாமன்னர் மருதுபாண்டியர் ஒருங்கிணைப்புக் குழு, முக்குலத்தோர் பேரவை ஆகியவற்றின் சார்பில், சனிக்கிழமை கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

    லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்தும், அவருக்கு சர்வதேச நீதி மன்றத்தின் மூலம் தண்டனை  பெற்றுத் தர வலியுறுத்தியும் இந்த ஊர்வலம் நடைபெற்றது.பட்டுக்கோட்டை நீதிமன்றம் அருகில் தொடங்கி, வருவாய்க் கோட்டாட்சியர்  அலுவலகம் வரை நடைபெற்ற ஊர்வலத்துக்கு மாமன்னர் மருதுபாண்டியர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில துணைத் தலைவர் தம்பிக்கோட்டை எம்.கே. செந்தில் தலைமை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai