சுடச்சுட

    

    பாஸ்போர்ட் பெற போலி ஆவணம்:இளைஞர் மீது வழக்கு

    By கும்பகோணம்,  |   Published on : 07th April 2013 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் மேலக்காவேரி ஏரகரம் ஜாமியா நகர் 3-வது பிரதான சாலையில் வசிப்பவர் அன்வர்பாட்சா மகன் ஷாகுல் அமீது (32). இவர் வெளிநாட்டுக்கு வேலைக்குச்  செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அதில் தனது பிறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்திருந்ததும், இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் உண்மையென உறுதிமொழி கையெழுத்து போட்டு ஏமாற்றி இருந்ததும் தெரிய வந்தது.  பாஸ்போர்ட் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸார் ஷாகுல் அமீது மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai