Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் மருத்துவமுகாம்:ரூ. 27 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகள் மருத்துவமுகாம்:ரூ. 27 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

    By பொன்னமராவதி,  |   Published on : 07th April 2013 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பொன்னமராவதியில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவமுகாமில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் முகாமுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிதலைவர் வி.சி. ராமையா முன்னிலை வகித்தார். திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் பிகே. வைரமுத்து முகாமை தொடங்கி வைத்தார்.

    மாலையில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

    இதுநாள் வரை எந்த அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமுகாம் நடத்தி அன்றைய தினமே உதவித்தொகைக்கான ஆணை, மருத்துவ உபகரணங்கள் வழங்கியதில்லை. தமிழக முதல்வர் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனுக்குடன் உதவிகள் செய்து வருகிறார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 8 மாற்றுத்திறனாளி முகாம்களில் பங்கேற்று 3000 பேர் பயனடைந்துள்ளனர் என்றார்.

    இம்முகாமில் பங்கேற்ற 779 மாற்றுத்திறனாளிகளில் 581 பேருக்கு அரசின் உதவித்தொகை,மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. 220 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் மூன்று சக்கர கைக்கிள், சிபி சேர்,அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. 

    இம்முகாமில் ஒன்றியக்குழு தலைவர் சி. அழகுசுப்பையா, பேரூராட்சித் தலைவர் ஆர்எம். ராஜா, துணை ஆட்சியர் தேவகிருபை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முன்னதாக, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் திருவரங்கம் வரவேற்றார். ஒன்றிய ஆணையர் சி. முத்து நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai