Enable Javscript for better performance
ராமசுவாமி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா வரும் 11- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இக்கோவில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். இக்கோவிலில்  ராமர், சீதாதேவி பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி அளிப்பதால், தென்னக அயோத்தி என்றழைக்கப்படுகிறது. இங்கு 64-க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகுற அமைந்துள்ளன. சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஸ்ரீராமநவமி விழா 10 நாள் உத்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஸ்ரீராமநவமி விழா வரும் 11-ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாள் (10-ம் தேதி)  பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

    வரும் 21-ம் தேதி முடிய நடைபெற உள்ள இவ்விழா நாள்களில் வெள்ளி  சூர்யபிரபை, சேஷவாகனம், ஓலைச்சப்பரம், வெள்ளி அனுமந்த வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம் ஆகியவற்றில் புறப்பாடு நடைபெற உள்ளது. வரும் 17-ம் தேதி மாலை சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது. வருகிற 18-ம் தேதி காலை வெண்ணைத்தாழி நடைபெறுகிறது.

    வரும் 19-ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாசன் மற்றும் பட்டாச்சார்யர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai