Enable Javscript for better performance
வினாக்குழு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வினாக்குழு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By தஞ்சாவூர்  |   Published on : 07th April 2013 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய வினாக் குழு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் தஞ்சாவூர் மாவட்டப் பொருளாளர் ஆர். ஆசைத்தம்பி தெரிவித்திருப்பது:

    பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணிதத் தேர்வில் வினாத்தாள் வடிவமைப்பு (புளூ பிரிண்ட்) விதிமுறையைப் பின்பற்றாமல் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

    மெய்யெண்களின் தொடர் வரிசைகளும், தொடர்களும் என்ற பகுதியிலிருந்து இரு 5 மதிப்பெண்கள் வினாக்கள் கேட்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஒரு மதிப்பெண் வினா மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இதேபோல, இயற்கணிதம், அணிகள், முக்கோணவியல், கணங்கள், உறவுகளும், சார்புகளும் ஆகிய பகுதிகளிலும் வினாத்தாள் வடிவமைப்பு விதிமுறைக்கு மாறாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

    ஆனால், மாணவர்கள் எதிர்பார்த்த வகையில் வினாக்கள் கேட்கப்படவில்லை. இதனால், கிராமப்புற மாணவர்கள் பதில் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மாணவர்கள் தேர்வு அறையில் அதிர்ச்சியுடனும், மன உளைச்சலுடனும் இருந்தனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித் துறையும் கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

    மேலும், இதுபோன்று தவறுதலாக வினாக்களைத் தேர்வு செய்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்கும், குழப்பத்துக்கும் ஆளாக்கிய தேர்வு வினாக் குழு உறுப்பினர்கள் மீது பள்ளிக் கல்வித் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai