Enable Javscript for better performance
விலையில்லாப் பொருள்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

     பூதலூர் ஒன்றியம் நேமம், திருவையாறு ஒன்றியம் வானராங்குடி ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி, எம். ரெத்தினசாமி ஆகியோர் சனிக்கிழமை  வழங்கினர்.

    நேமம்: பூதலூர் ஒன்றியம் நேமம் ஊராட்சியில் 443 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் துணை ஆட்சியர் எஸ். குணசேகரன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு  உறுப்பினர் சத்தியபாமா வெங்கடேசன், ஊராட்சித் தலைவர் கோ. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பங்கேற்ற தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெத்தினசாமி ஆகியோர் பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்களை வழங்கிப் பேசினர்.

    விழாவில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.எம். சுப்பிரமணியின், ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை திருஞானசம்பந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ். ராஜா, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.பி. வெங்கடேசன், திருக்காட்டுப்பள்ளி நகர அதிமுக செயலர் எம்.பி.எஸ். ராஜேந்திரன், எம்ஜிஆர் மன்ற ஒன்றியச் செயலர் சரவணபால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    வானராங்குடி: திருவையாறு ஒன்றியம், வானராங்குடியில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி, எம். ரெத்தினசாமி ஆகியோர் பங்கேற்று, 387 பயனாளிகளுக்கு விலையில்லாப் பொருள்களை வழங்கிப் பேசினர்.

    விழாவில் திருவையாறு ஒன்றியக்குழுத் தலைவர் மலர்க்கொடி தமிழரசன், துணைத் தலைவர் என். இளங்கோவன், பேரூராட்சித் தலைவர் செந்தில்மணி, ஊராட்சித் தலைவர் மாலதி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai