Enable Javscript for better performance
838 பேருக்கு விலையில்லா பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

     தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டங்களின் கீழ் தஞ்சாவூர் நகராட்சி 8-வது வார்டில் பயனாளிகள் 838 பேருக்கு விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை வழங்கி வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் பேசியது:

    தமிழக மக்கள் நலனுக்காகத் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குத் தேவையான பல திட்டங்களை முதல்வர் இப்போதே நிறைவேற்றிவிட்டார் என்றார் வைத்திலிங்கம்.

    விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் தெரிவித்தது:

    மாவட்டத்தில் இதுவரை 85 சதவீதம் மக்களுக்கு விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நபர்களுக்கும் விரைவில் வழங்கப்படும் என்றார் பாஸ்கரன். விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), எம். ரெத்தினசாமி

    (திருவையாறு), மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டி ஊராட்சியில் 211 குடும்பங்களுக்கு விலையில்லா மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர்

    ஆகியவை வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai